'நவம்பர் 30| கார்த்திகை 14
மதுரை
நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை அடுத்து அப்துல் கலாம் நிறுத்தம் என்ற இடத்தில் வழக்கறிஞர் படிப்பை படிக்கும் மாணவி ஒருவர் இரவு 10.30 மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்க தயாரானார் ஆனால் உடனே நடத்துனர் மாணவியிடம் உன் பெற்றோர்கள் யாராவது அழைத்து சென்றால்தான் இந்த இரவில் இறக்கி விடுவேன் இல்லையென்றால் இறக்கி விடமாட்டேன் என்று கறாராக கூறினார். அந்த மாணவியின் பெற்றோருக்கு போன் மூலமாக தகவலும் கொடுத்தார் அவர்கள் வருவதற்கு 15 நிமிடங்கள் காலதாமதமானது உடனே ஓட்டுனரும் நடத்துனரும் இரவில் இறக்கி விட மாட்டோம் தயவுசெய்து வண்டியிலேயே இருமா ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடுகிறோம் என்றார்கள் காலம் கெட்டு கிடக்கு பெண் குழந்தையை பாதுகாப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் பத்து நிமிடம் காத்திருப்புக்கு பின் மாணவியின் சித்தப்பா அவரை அழைத்து செல்லும் வரை பேருந்து அந்த இடத்தில் நின்றது உண்மையிலேயே இரவு நேரங்களில் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஓட்டுநர் அந்தோணி ராஜ் நடத்துனர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் உடன் பயணித்த சக பயணிகள் தெரிவித்தனர்.


