Type Here to Get Search Results !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கார் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Arun Kumar J

 



வாணியம்பாடி, பிப்ரவரி-12


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (40) வாகனங்களை வாங்கி விற்கும் (ஆட்டோ கன்சல்டிங்) தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சதாம் உசேன் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஸ்கார்பியோ கார் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சடைந்த  சதாம் உசேன் சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



சதாம் உசேனின் மச்சான் வசீம் (35) சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற் கொண்டதில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது சதாம் உசேன் மற்றும் வசீமுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், தொடர்ந்து பழி வாங்கும் நோக்கத்தில் சதாம் உசேனின் காரை திருடியதும், மேலும் அதை நண்பரான முஹம்மத் இத்தியாஸ் உதவியுடன் சென்னைக்கு கொண்டு சென்று ரூ. 50 ஆயத்திற்கு விற்றதும் தெரிய வந்தது. 



இதனை தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் கார் திருட்டில் ஈடுபட்ட வசீம் மற்றும் முஹம்மத் இத்தியாஸ் ஆகியோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.