டிசம்பர் 23|மார்கழி 08
தஞ்சாவூர்
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றிய கிளை மாதாந்திர கூட்டம் கடந்த 14.12.2025 அன்று SPS திருமண பூங்காவில் நடந்தது. இக்கூட்டத்தில் TNETA தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலமுருகன் முன்னிலையில், கிளை நிர்வாகிகள் ஏற்பாட்டில் தலைவர் காமராஜ், செயலாளர் கோதண்டராமன் பொருளாளர் சிவசக்தி துணைத் தலைவர் ஜெயக்குமார் துணைச் செயலாளர் ராஜா மற்றும் உறுப்பினர்களுடன் சிறப்பாக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு தொழிற்சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. உறுப்பினர்களிடம் நம் மின் பணி சார்ந்த தகவல்கள் மற்றும் பாதுகாப்பான முறையில் பணி செய்வது மின் உரிமம் பற்றிய கருத்துகள் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் நலவாரிய முகாம் ஏற்படுத்தி உறுப்பினர்களை பயனாளியக மாற்றுவோம் என கிளை நிர்வாகிகள் பேசினர்.


