சனவரி 24|தை 10
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாண்புமிகு கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆணைப்படி வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எ MRK.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் வழிகாட்டுதல்படி,
தருமபுரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர்கள் C.செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP,அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் தருமபுரி மேற்கு நகர கழக பொறுப்பாளர்கள் M.P.கௌதம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம்
பெ.சுப்ரமணி Ex.MLA,
PNP.இன்பசேகரன் Ex.MLA,
தொகுதி பார்வையாளர்கள்
தருமபுரி
T.செங்குட்டுவன் Ex.MLA, அவர்கள்
பென்னாகரம் பாரி மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் .தருமபுரி கிழக்கு நகர கழக செயலாளர் நாட்டான்.M.மாது நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானம் : 1
வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடு வீடாக மகளிர் பரப்புரை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், தோழி விடுதிகள், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என எண்ணற்ற மகளிர் மேம்பாட்டுத்திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டுப் பெண்களை உலகளவில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்களாக’ மாற்றியுள்ள மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று திராவிட மாடல் 2.0 அமைந்திடும் வகையில், நமது திராவிட மாடல் அரசு பெண்களுக்குச் செய்துள்ள சாதனைத்திட்டங்களைப் பெண்களிடம் எடுத்துக்கூறி மகளிரின் முழுமையான ஆதரவு கழகத்திற்கு மட்டுமே என்ற நிலையை உறுதி செய்திட வேண்டும் என கூட்டம் தீர்மானிக்கிறது.
பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதுபோது கழக அரசின் மகளிர் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், சாதனைத் திட்டங்களின் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களிடம் கழகத்திற்கான ஆதரவைத் திரட்டிட வேண்டும் எனவும், இந்தப் பரப்புரை மூலம் பெண்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் முழுமையாக கழத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 2
தமிழ்நாடு தலைகுனியாது - பரப்புரை
பிப்ரவரி-1 முதல் பிப்ரவரி-28 வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திரப் பரப்புரையாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமைக்கழகம் அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. நட்சத்திரப் பரப்புரையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 4 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் அல்லது அரங்கக் கூட்டங்களாக பரப்புரை செய்வதுடன், தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மண்டலப் பொறுப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள்/ மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்தும் கலந்துரையாடலாக பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இப்பரப்புரைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்து ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை வெற்றியடையச் செய்திடுவது என கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 3
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ -
கழக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2), 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (BLC) மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) ஆகியோரைத் தேர்தல் பணிக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் ‘‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’’ - வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு.பிப்ரவரி-14 அன்று வடக்கு மண்டலம் மாநாட்டை திருப்பத்தூரி பெரும் திரலாக கலந்துக்கொள்வது,
தீர்மானம் : 4
‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ - கழக மாநில மாநாடு
சட்டப்பேரவைத் தேர்தலில் கழத்தின் வெற்றியை பறை சாற்றும் வகையில் மார்ச்-8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 10 இலட்சம் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளும் ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ மாபெரும் கழக மாநில மாநாட்டில் பெரும் திரலாக கலந்துக்கொள்வது என் தீர்மானிக்கப்பட்டது.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.



