சனவரி 28 |தை 14
நாகர்கோவில்
கடந்த 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு தெரு குழாயில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த 51 வயது பெண்ணை அவரது வீட்டுக்குள் மறைந்திருந்த அன்பு நகர், புத்தேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்ப்பு தெரிவித்ததால் அரிவாளால் அந்தப் பெண்ணை தலை மற்றும் நெற்றியில் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதற்காக வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

