சனவரி 24|தை 10
தருமபுரி,
தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக சுமார் 75 வயது மதிக்கத்தக்க பாட்டி யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் தருமபுரி மாவட்ட சமூக நலத்துறை அனுமதியுடன் பாட்டியை மீட்டு வெண்ணாம்பட்டியில் உள்ள அன்னையர் ஆலயம் முதியோர் இல்லத்தில் பாட்டி சேர்க்கப்பட்டார். இவரது உறவினர்கள் இந்த தகவலை பெற்றால் உடனடியாக தொடர்பு கொள்ளவும். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர் காதர் ஆகியோர் மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். முதியோர்களை பாதுகாப்போம் முதியோர்களை அரவணைப்போம்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

