Type Here to Get Search Results !

அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் பெருந்தகையின் புகழைப் போற்றும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

Arun Kumar J

 டிசம்பர் 21|மார்கழி 06



அரூர் 


டிசம்பர் 19.12.2025 காலை 10.00 மணிக்கு அரூர் நகர திமுக சார்பில் தந்தை பெரியாருக்கு மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் சீடனாகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் நண்பனாகவும்,கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆசானாகவும் திகழ்ந்த இனமானப்  பேராசிரியர் பெருந்தகையின் 103-வது பிறந்தநாளில் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.



அரூர் நகர கழக செயலாளர் முல்லைரவி அவர்கள் தலைமை வகித்தார்நிகழ்வில் மாநில ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி துணைத் தலைவர் சூர்யா D.தனபால், மாவட்ட துணைச் செயலாளர்சி. கிருஷ்ணகுமார், மாவட்ட ஐடிவிங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் S.கலைவாணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தீ.கோடீஸ்வரன், நகர துணை செயலாளர்கள் K.செல்வதயாளன்,  தி.வின்னரசன், தீ.கனேசன், G.நெப்போலியன், பாடகர்மணி, இளைஞர் அணி அமைப்பாளர் கள் JCP.K.மோகன், செந்தில்குமார், P.ஜெயாரகாஷ், சுதாகர், முனுசாமி, சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.