டிசம்பர் 09|கார்த்திகை 23
தருமபுரி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்த சுந்தரபாண்டி 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உறவினர்கள் இன்றி வாழ்ந்து வந்துள்ளார். இவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அக்கம் பக்கத்தினர் மீட்டு இவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு தாத்தாவை கொண்டு வந்தனர். வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் தாத்தா இறந்தார். இவரது புனித உடலை திருப்பத்தூர் காவல் நிலைய காவலர் சிவச்சந்திரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தன்னார்வலர்கள் கார்த்திக், கணேஷ் குமார், பார்வதி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 176 புனித உடல்களை தங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்துள்ளனர். ஆதரவற்றோர்களுக்கு உறவாய் மை தருமபுரி அமைப்பினர்.

