டிசம்பர் 24|மார்கழி 09
திருவள்ளூர்
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 21.12.2025 அன்று புது கும்மிடிப்பூண்டி பகுதி எல்லையம்மன் கோவில் வளாகத்தில் 'H' தேர்விற்கான தேர்வாளர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பு நடத்தினர். இப்பயிற்சி முகாமில் 25க்கு மேற்பட்ட தேர்வாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இப்பயிற்சி முகாம் TNETA மாநில பொருளாளர் திரு ரமேஷ் மாநில துணை செயலாளர் திரு மணிகண்டன் போன்றோர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் - கும்மிடிப்பூண்டி கிளை & வில்லிவாக்கம் கிளை நிர்வாகிகள் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
தேர்வாளர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பினை வில்லிவாக்கம் கிளை தலைவர் திரு.ரவி அவர்கள் கற்பித்தார். மற்றும் எலக்ட்ரீசியன் ஆன நாம் ஆபத்தான மின் பணி செய்கிறோம். நமக்கான அடையாள ஆன மின் உரிமம் பெற்று பணி புரிவோம் என நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.


