டிசம்பர் 24|மார்கழி 09
தருமபுரி
தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையம், ஒருங்கிணைந்த சேவை மையம், மை தருமபுரி அறக்கட்டளை இணைந்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் மூலம் மாவட்ட அளவில் விழிப்புணர்வுகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக குழந்தை திருமணங்கள் தடுப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறோம். பருவ வயதை கடந்த பிறகு பெண் குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு இல்லை எனக் கருதி பலரும் தங்கள் மகள்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதை தடுப்பதற்காகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளை போற்றும் விதமாக மரக்கன்றுகள், பெண் குழந்தைகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, உறுதுமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு மாவட்ட சமூக நல அலுவலர் ஆ.கலாவதி அவர்கள் தலைமை தாங்கினார்கள், தருமபுரி அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் பாவேந்தன், குழந்தை நல மருத்துவர்கள் பாலாஜி, மருத்துவர் கீதா ஆனந்தன் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மை தருமபுரி தொண்டு நிறுவனம் மற்றும் தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள் இணைந்து நடத்தினர்.
- மை தருமபுரி அமைப்பு





