டிசம்பர் 23|மார்கழி 08
![]() |
| மை தருமபுரி அமைப்பு (NGO) |
தருமபுரி
தருமபுரி அரசு மருத்துவமனை அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க பாட்டி கடந்த பத்து நாட்களாக சாலை ஓரத்தில் வயதான நிலையில் இருந்தார். இவரிடம் விசாரித்ததில் இவரைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. தருமபுரி மீட்பு அறக்கட்டளை பாலசந்திரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார், ராஜா மற்றும் குழுவினர்கள் இணைந்து பாட்டியை மீட்டு தூய்மை செய்து அரூர் லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்த பாட்டியை போன்று பலரும் தங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களை சாலையோரத்தில் விட்டுச் சென்று விடுகின்றனர், அரசாங்கத்தின் முறையான அனுமதி பெற்று இவர்களை காப்பகத்தில் சேர்த்தால் இவர்களது இறுதி காலம் நிம்மதியாக இருக்கும்.

