டிசம்பர் 19|மார்கழி 04
கள்ளக்குறிச்சி
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட மாதாந்திர கூட்டம் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தியாகதுருகம் பகுதி மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
TNETA மாவட்ட தலைவர் திரு.சிவசங்கர் தலைமை தாங்கினார். பொருளாளர் திரு தனவேல் மற்றும் து.செயலாளர் திரு கெளஸ்பாஷா முன்னிலையில் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் இயற்கை எய்திய கள்ளக்குறிச்சி பகுதி மின்பணியாளர் திரு கோபியின் குழந்தைகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட TNETA சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்நின்று சங்க உறுப்பினர்கள், சங்கம் சாராத மின் பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் மின்சாதன அங்காடி உரிமையாளர்களின் பங்களிப்போடு ரூபாய் 51000 நிதி திரட்டப்பட்டது. அதை கோபியின் இரு குழந்தைகளுக்கும் தலா 25500 வீதம் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பில் முன்வைப்பு தொகை செலுத்தி சேமிப்பு புத்தகம் இரு குழந்தைகளிடம் அவர்களின் தாத்தா முன்னிலையில் வழங்கப்பட்டது. நிதி உதவி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட TNETA சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.


