டிசம்பர் 23|மார்கழி 08
டிசம்பர் 19 & 20, ஜம்மு & காஷ்மீரில் நடந்த தேசிய நிகழ்வில் மாண்புமிகு கேபினெட் அமைச்சர் திரு. ராகேஷ் சர்மா அவர்கள் இரத்தப் பாதுகாப்புச் சட்டம் ஆதரவு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த மாதம் பாராளுமன்றத்தில் இரத்தப் பாதுகாப்புச் சட்டம் (Blood Act Bill) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சட்டமாக உருவாக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஏன் இந்தச் சட்டம்?
• பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய,
• பாதுகாப்பான இரத்த சேமிப்பு, பதப்படுத்துதல், மாற்று முறைகளுக்கு சட்ட பாதுகாப்பு.
• இரத்த தானம் செய்பவர்களும் பெறுபவர்களும் பாதுகாப்பாகவும் நலமுடனும் வாழ,
• உயிரைக் காக்கும் மருத்துவ சேவைகளுக்கு மிகப் பெரிய ஆதாரம் இந்த சட்டம்.
நீங்கள் செய்ய வேண்டியது – ஒரு மிஸ்டு கால் மட்டும்தான் 📞 9830720555 இந்த மிஸ்டு கால் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு இந்தியா பாதுகாப்பான இரத்தச் சட்டத்தை விரும்புகிறதுஎன்பதை தெரிவிக்கும் ஆதரவாக கணக்கில் எடுக்கப்படும்.
நாமும் வாக்களிப்போம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவிப்போம் பாதுகாப்பான இரத்தம் – பாதுகாக்கப்பட்ட உயிர்கள் என்பதை இந்த சட்டத்தின் வழியாக உறுதி செய்வோம்.
- மை தருமபுரி அமைப்பு

