டிசம்பர் 12|கார்த்திகை 26
சேலம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானதற்கு விண்ணப்பதாரர்கள் SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மின்சாரப் பணியாளர், வயர்மேன், அல்லது மின்சாரம் (ITI) போன்ற தகுதிகளில் தேசிய தகுதிச் சான்றிதழ் (NTC) அல்லது தேசிய பயிற்சிச் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி அறிவு அவசியம் என்ற விதிமுறைகளின் படி கடந்த 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை TNPSC மூலம் தேர்வாளர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வாளர்கள் தங்களது மதிப்பெண் அறியும் வகையில் TNPSC அதிகாரப்பூர்வமாக Answer key மற்றும் Answer Sheet TNPSC இணையத்தளத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு எம்ப்ளாயீஸ் பெரடேஷன் தொழிற்சங்கம் தமிழ்நாடு முழுவதும் நான்கு முதல் ஐந்து மாவட்டங்கள் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட பயிற்சி யான கம்பம் ஏறுதல், Gripper set அடித்தல் மற்றும் 35 கிலோ எடை கொண்ட "V* கிராஸ் ஆராம் தூக்கிக்கொண்டு 100மிட்டர் ஓடுதல் உள்ளிட்ட அடுத்தகட்ட பயிற்சிகள் வழங்கி வருகின்றது. முதல் கட்டமாக கோயம்புத்தூர் தஞ்சாவூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறுகிழமை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முழு நேரமாக பயிற்சி வழங்கி வருகின்றனர். அடுத்தகட்டமாக சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் கரூர் ஆத்தூர் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்து சேலம் மாவட்டத்தில் பயிற்சி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற கீழே உள்ள கூகுள் ஷீட்டில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்...
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSen_anGF_wn5f6ouE-IbSKYTgCoAsQOb7KKXfqY8Pr8IEKGww/viewform
- Tamilnadu Electricity Board Apprentice Trade Union (TNEBATU)





