Type Here to Get Search Results !

தமிழக ஆசிரியர் மாவட்ட வள நபராகவும், தேசிய கலாச்சார தூதராகவும் தேர்வு இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய கலாச்சார வளநிலைப் பயிற்சி மையம் (சிசிஆர்டி)

Arun Kumar J

டிசம்பர் 14|கார்த்திகை 28




 நியூடெல்லி


பள்ளிக் கல்வியில் இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரம், கலைகள், மதிப்புகள் மற்றும் பாரம்பரியத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் நாடு முழுவதும் பணியாற்றுகிறது. இந்தியாவின் பண்பாட்டு மரபை பாடத்திட்டத்தில் இணைக்க பல்வேறு பயிற்சிகள், பணிமனைகள் மற்றும் கலாச்சார செயல்பாடுகளை சிசிஆர்டி தொடர்ந்து நடத்தி வருகிறது.



தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் அ. ஷர்மிளா பேகம்,  சிசிஆர்டி-யால் மாவட்ட வள நபராக  டிஆர்பி யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தேர்வின் மூலம் அவர் மாஸ்டர் டிரெய்னர் மற்றும் தேசிய கலாச்சார தூதராக செயல்பட  உள்ளார்.



அவர் 2025 நவம்பர் 21 முதல் 23 வரை உதையபூர்  பிராந்திய மையத்தில் நடைபெற்ற “பாடத்திட்டத்தில் கலாச்சார உள்ளீடுகள்” என்ற மூன்று நாள் தேசிய பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டார். இந்த பயிற்சியில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 85 ஆசிரியர்கள், தமிழ்நாட்டிலிருந்து 10 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



பயிற்சியை துணை இயக்குநர் (மதிப்பீடு) டாக்டர் ராகுல் குமார் வழங்கினார்; மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பை, ஒருங்கிணைப்பாளர் மிதுன் தத்தா மேற்கொண்டார். பயிற்சி நிறைவில், துணை இயக்குநர் (மதிப்பீடு) டாக்டர் ராகுல் குமார் அவர்கள், ஆசிரியர் டிஆர்பி. அ.ஷர்மிளா பேகத்திற்கு பங்கேற்புச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.



இதனைத் தொடர்ந்து அவர்  தர்மபுரி மாவட்டத்தில் கலாச்சாரக் கல்வி பயிற்சிகள், பாடத்திட்டத்தில் கலாச்சார ஒருங்கிணைப்பு, மற்றும் பள்ளிகளில் இந்திய மற்றும் உள்ளூர் பண்பாட்டைப் பரப்பும் பணிகளில்  பங்காற்று உள்ளார். மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலாச்சாரத்தை பேணி பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளார்.





எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.