டிசம்பர் 16 |மார்கழி 01
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைகிராமம் நடுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சின்னகாளி. இவர் கணவனை இழந்து தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னகாளி கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள நிலத்தில் தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டதில் சின்னகாளியின் மகள் கீதா அவரது தாய் பெயரில் உள்ள 6 ஏக்கர் சொத்தை தனது பெயரில் மாற்றி எழுதிதரக்கூறி அவரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சண்டையிட்டு வந்ததாகவும்,சின்னகாளி மகள் கீதாவிற்கு சொத்தை எழுதிதர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகள் கீதா தனது கணவர் சிதம்பரம் உடன் சேர்ந்து தாயை கொலை செய்ய திட்டம் தீட்டி, சம்பவத்தன்று கீதா தனது கணவர் காட்டிற்குள் சென்றுள்ளதாகவும் அவரை தேடிச்செல்ல கூட வரும்படி அழைத்துள்ளார்.இதனை நம்பி தனது மகளுடன், சென்ற சின்னகாளியை, காட்டுப்பகுதியில் மறைவான இடத்தில் வைத்து மருமகன் சிதம்பரம் கல்லைக்கொண்டு மாமியார் சின்னக்காளி தலையில், தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கீதா மற்றும் அவரது கணவர் சிதம்பரத்தை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



