சனவரி 30|தை 16
பாப்பிரெட்டிபட்டி,
தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தின் பின்புறம் விடிவெள்ளிநகர் வழியாக செல்லும் வழித்தடத்தை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து புது ஒட்டுப்பட்டி, விடிவெள்ளி நகர், பாரதி நகர், கலைஞர் நகர், திப்பிரெட்டிஹள்ளி, பண்டாரசெட்டிப்பட்டி, தாளம்பள்ளம், வெள்ளரிக்காடு, சொரக்காய்பட்டி போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர்....
இத்த வழியை பயன்படுத்தினால் தான் அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு மாணவியர் விடுதி இவற்றுக்கு செல்ல வண்டும்....ஆனால் நேற்று 29/1/2026 ரயில்வே நிர்வாகம் எந்த வித முன்னறிவிப்பமின்றி இது எங்களுடைய இடமென்று இந்த பாதையை அடைத்து கொண்டனர்..
இதனால் இந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.. விடிவெள்ளிநகரில் இருந்து பொம்மிடி பேருந்து நிலையத்திற்கு அரை கிலோ மீட்டரில் சென்றடையும் தூரமானது இப்பொழுது 5 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.....மக்கள் போராட்டம் வெடிக்கும் முன் மத்திய, மாநில அரசு மற்றும் ரயில்வே துறை ஆலோசித்து இந்த விடிவெள்ளிநகர் வழி பிரச்சினையை சரிசெய்யுமாறு பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்......
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

