பிப்ரவரி 01|தை 18
சென்னை,
தமிழ்நாடு அரசின் வேலையற்றோர் உதவித்தொகை (2026) சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்)
- கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு (தோல்வி/தேர்ச்சி), 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ அல்லது பட்டதாரிகள்.
- பதிவு மூப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்கள்.
- வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ₹72,000-க்குள் இருப்பவர்கள்.
- வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (SC/ST பிரிவினருக்கு 45 வயது வரை சலுகை உண்டு).
விண்ணப்பம் கிடைக்கும் இடம்:
- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கிண்டி, சென்னை - 32.
- மாற்றுத்திறனாளிகள்: கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

