பிப்ரவரி 01| தை18
தருமபுரி
மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும் இரத்த தானமும் அவசர தேவையாக தமிழக முழுவதும் வழங்கி வருகின்றனர்.
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தலைமுடி செய்ய கூந்தல் தானம் விழிப்புணர்வை தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ஃபேஷன் ஷாப்பி நிர்வாக இயக்குனர் கணேசன் அவர்களின் மனைவி மென்பொறியாளர் புவனேஸ்வரி அவர்கள் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கினார்.
அவரது குடும்பத்தினருக்கும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறோம். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ்குமார் ராஜா கூந்தல் தானத்தை பெற்று கொண்டார்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

