Type Here to Get Search Results !

தருமபுரியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை, எஸ்பிஐ வங்கியில் கொடுத்து அக்கவுண்டில் போட முயன்றவரை கம்பி எண்ண வைத்த காவல்துறை - தருமபுரியில் பரபரப்பு

Arun Kumar J

பிப்ரவரி 21|மாசி 09


 



 தருமபுரி,


தருமபுரி நாட்டாமைபுரம் பகுதியில் வடிவேல் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் மதிவாணன் என்பவர் செகண்ட் ஹேண்டில் பைக் வேண்டுமென வடிவேலுவை தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அதில் ஹீரோ ஹோண்டா பைக்கை டீல் பேசி 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளார்.



குறித்த தேதியில் நேரில் சென்ற மதிவாணன் வண்டிக்குரிய பணம் மற்றும் தனது ஆதார் கார்டு ஆவணங்களை வடிவேலுவிடம் கொடுத்துவிட்டு பைக்கை வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், மதிவாணன் கொடுத்த பணத்தை தனது அக்கவுண்டில் வரவு வைக்க எஸ்பிஐ வங்கிக்கு வடிவேலு சென்றுள்ளார். டெபாசிட் படிவத்தை நிரப்பி பணத்தை காசாளரிடம் கொடுத்துள்ளார்.



அதை வாங்கி எண்ணிப் பார்த்தபோது 200 ரூபாய் நோட்டுகளில், 24 கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவர வங்கி காசாளர் ஷாக் ஆகியுள்ளார். ஆனால், பதறாமல் நிதானமாக சார் இந்த நோட்டுகள் செல்லாது எனக்கூறி அதை வடிவேலுவிடமே கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். பின்னர், அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றபோது, நேக்காக காவலருக்கு போன் செய்து, வடிவேலுவை காசாளர் சிக்க வைத்துள்ளார்.



புகாரின் அடிப்படையில் வடிவேலுவை பிடித்த போலீசார் அவரிடம் இருந்த கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர். "தன்னிடம் செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கிய மதிவாணன் கொடுத்த பணம்தான் சார் இது!" கள்ள நோட்டுன்னு எனக்கு சத்தியமா தெரியாது? என வடிவேலு கண்ணீர் விட்டுள்ளார்.




உடனே வடிவேலுவிடம் இருந்த மதிவாணனின் ஆதார் கார்டு ஜெராக்ஸை வாங்கிய போலீசார், அவரை தேடி சென்றபோது அப்படியொரு முகவரியே இல்லை என்பதும், மதிவாணன் என்ற அடையாளமும் போலி என்பதும் தெரியவந்தது. இதனால் "உண்மையிலேயே மர்ம நபர் ஒருவர் கள்ள நோட்டுகளை செந்திலிடம் கொடுத்து, செகண்ட் ஹேண்டில் பைக்கை வாங்கினாரா? இல்லை கள்ள நோட்டுகளை கைமாற்றி, ஒரு கட்டுக்கதை விடுகிறாரா?" என்ற கோணத்தில் சந்தேகம் எழுந்தது.




அது தொடர்பாக கள்ள நோட்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக, வடிவேலுவை கைது செய்து விசாரித்துவரும் போலீசார், மர்ம நபர் மதிவாணனையும் தேடி வருகின்றனர். இதில் உண்மையான குற்றவாளி சிக்கும்பட்சத்தில் கள்ள நோட்டு அச்சடித்தது யார்? அதை தருமபுரியில் புழக்கத்தில் விட முயன்றது யார்? உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.