பிப்ரவரி 21|மாசி 09
தமிழகம்,
திமுக ஆட்சியில் குவாரியில் நடந்து வரும் முறைகேடு தொடர்பான விஷயம் நாளுக்கு நாள் பூதாரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அமைச்சர் துரைமுருகனின் வலது கரம் என்று சொல்லக்கூடிய குடியாத்தம் குமரன் என்பவர் இரண்டு வருடத்தில் மட்டும் சுமார் 60,000 கோடி ரூபாய் குவாரிகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வும் அரங்கேறி இருந்தது.
இந்த நிலையில் குவாரிகள் மூலமாக வருடத்திற்கு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டப்பட்டு வருவதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் செலவுக்கான கஜானாவாகவே தமிழக முழுவதும் இயங்கும் கல்குவாரியை பார்க்கப்படுகிறது. தமிழக முழுவதும் கல்குவாரிகள் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை முதல் குடும்பத்திற்கு கப்பம் கட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதை தவிர்த்து ஒட்டுமொத்த குவாரிகளிடமிருந்து மொத்தம் சுமார் 5000 கோடி ரூபாய் தேர்தல் செலவுக்காக வேண்டும் என்று திமுக முதல் குடும்பத்தில் இருந்து உத்தரவு பரந்து இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். திருநெல்வேலியில் மட்டும் சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகளுக்கு 250 கோடி ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டதாகவும், அதன் பின்பு சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட பின்பு, அதை 25 கோடியாக குறைக்கப்பட்டு அதையும் தவணை முறையில் கட்டலாம் என்று தெரிவித்தது, எந்த அளவுக்கு சட்ட விரோத குவாரிகள் தமிழகத்தில் செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. இந்த நிலையில் கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் மட்டும் மணல் கல்குவாரிகள் மூலம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை கல்லா கட்டப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கிருஷ்ணகிரியில் இருந்து கனிம வளங்கள் ஓசூருக்கு கடத்தப்பட்டதில் மட்டும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சபாநாயகர் அப்பாவு சொந்த தொகுதியான ராதாபுரத்தில் மட்டும் இருபதுக்கு மேற்பட்ட சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி கனிம வள கொள்ளை குறித்த தமிழக முழுவதும் இயங்கி வரும் குவாரிகளின் மொத்த பட்டியலும் அமித்ஷா பார்வைக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த குவாரி விவகாரம் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி மதுரை வர இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே இந்த குவாரி விவகாரம் மிகப்பெரிய அளவில் பூதரமாக வெடிக்கும் என்றும் குறிப்பாக நீதிமன்ற மூலம் இந்த குவாரி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு சென்றால் அது வரும் சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு இந்த குவாரி முறைகேடு விவகாரம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் குவாரி கொள்ளையில், திமுக முக்கிய புள்ளிகள் பல பெயர்கள் அமித்ஷாவின் பார்வைக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் குவாரி விவகாரத்தை மிக சீரியசாக கையில் எடுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் சட்டசபை தேர்தலில் இந்த குவாரி விவகாரத்தை வைத்தே திமுகவை வீழ்த்துவதற்கான வேளையில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

