பிப்ரவரி 20|மாசி 08
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் தர்ஷினி என்ற பெண்ணுக்கு O+ குருதி தேவை என்ற செய்தி வாட்ஸ்-அப் (whatsapp) குழுவில் வந்த செய்தியை கண்ட ஓசூர் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் நாம் தமிழர் கட்சி குருதிக் கொடை பாசறை சார்பாக அப்பெண்ணுக்கு உடனடியாக தனது O+ குருதியை விலையில்லாமல் தானமாக வழங்கி குருதிக் தேவையை பூர்த்தி செய்தார். உதவும் உள்ளம் கொண்ட நாகரத்தினம் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

