பங்குனி 03|செவ்வாய்க்கிழமை

ஆதரவு இல்லாமல் இறந்த தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மார்ச் 17|தருமபுரி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையோரத்தில் யாசகம் பெற்று வந்துள்ளார்.
இவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வயது முதிர்ந்த காரணமாக இறந்த இவரை பற்றி இரயில் காவலர்கள் விசாரித்ததில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
ஜோலார்பேட்டை ரயில்வே நிலைய காவலர் குமரேசன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமைப்பாளர் முனைவர் கிருஷ்ணன், சிவன் திருவடி சேவை குழு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 197 ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
