Type Here to Get Search Results !

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் -2026 விழாகொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றத

Arun Kumar J

 சனவரி 15|தை 01







தருமபுரி


மற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் -2026 விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.



விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்  தாபா M. சிவா, தலைமை ஆசிரியர் (பணி நிறைவு) செயலாளர், தருமபுரி மாவட்ட கம்பன் கழகம் K. குமரவேல் உதவி மருத்துவ அலுவலர், பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு G. முனுசாமி கௌரவ தலைவர், த. மா. மா. நல்வாழ்வு சங்கம் K. பாலசுப்பிரமணியம், B T உதவியாளர் (கணிதம்), GHS  திப்பம்பட்டி டி.பி.ரேவதி, AK குரூப்ஸ், லக்மே நிர்வாக உரிமையாளர் அப்பாதுறை மற்றும் லக்மே சலோன் மேலாளர் ஸ்ருதி ஆகியோரின் முன்னிலையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில்  50 மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த  தருமபுரி  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம்-தகடூர் பி.வெங்கடேசன் தலைவர்,  P. மாரிமுத்து துணைத் தலைவர், N. கோவிந்தராஜ் செயலாளர்,  வ.வினோத்குமார் பொருளாளர், K. எஸ் கே ஜி மாநில செயற்குழு உறுப்பினர், G. செந்தில்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், R.பிரியங்கா மகளிர் அணி  செயலாளர், P. முனியப்பன் மக்கள் தொடர்பு அலுவலர், S. கங்காதரன் செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 



இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவி செய்த நன்கொடையாளர்கள் அனைவருக்கும்  சங்க நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு    மதிய உணவு வழங்கப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.