Type Here to Get Search Results !

தருமபுரி ஆதி பவுண்டேஷன் சார்பில் பசுமை பொங்கல் விழா நடைப்பெற்றது . தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் பெரிய ஏரி பகுதியில் ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதிமூலம் தலைமையில் பசுமை பொங்கல் விழா நடைப்பெற்றது

Arun Kumar J

 சனவரி 15|தை 01












தருமபுரி



தமிழர்களின் பண்பாடுகளை உணர்த்தும் விழா நாம் பெருமையுடன் கொண்டாடும் 'பொங்கல் திருவிழா'. இந்த பொங்கல்விழா தமிழர்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் ஒரு தனி சிறப்பு வாய்ந்த பண்டிகை இந்த பொங்கல் பண்டிகை. இந்த தைத்திருநாள் வருகிற 15-ஆம் நாள் அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில்  சேவாபாரதி மாநில தலைவர், விவேகானந்தன்  மருத்துவர், மனோஜ் தொப்பூர் சுங்கச்சாவடி திட்ட இயக்குநர்  நரேஷ்  தமிழ்நாடு மின்சார வாரியம் ஹரிஹரன் செயற்பொறியாளர் ,BNI குழுவினர் அகிலன், வேடியப்பன், செந்தில், விக்ரமன், ரமணன், பரமேஸ்வரன்,  JCI சார்பில் பாபு மற்றும் கணேசன், விஜய் வித்யாலயா கல்லூரி ஆசிரியர் மற்றும் NSS அலுவலர் நஞ்சுண்டான் ஆகியோரும்,



மேலும்  ஆதி பவுண்டேஷன் உறுப்பினர்கள்  தம்பிதுரை, இளஞ்செழியன் வினோத், பிரபு, சக்தி, சிரஞ்சீவி, சின்னதுரை சஞ்சீவன், திருப்பதி அரசு குமார், சக்கரவர்த்தி, அருள், கணேஷன், கோவிந்தசாமி,  லட்சுமணன், விக்னேஷ், சங்கர் ரெட்டி, ரங்கநாதன், சத்யா முருகேசன், இண்டூர் ஏரி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் மற்றும்  பொதுமக்கள்  மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் 



இந்த பசுமை பொங்கல் விழா, ஏரிகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை காக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆதி புவுண்டேசன் செய்தி மற்றும் ஊடக பிரிவு பொறுப்பாளர் மு .பிரேம்குமார் அவர்கள் நன்றி தெரிவித்தார்.



செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.