Type Here to Get Search Results !

10th, +1, +2 தனித் தேர்வர்கள் தட்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!!! விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2026

Arun Kumar J

 சனவரி 07|மார்கழி 23



நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்து, தக்கல் முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்:

​ஏற்கனவே 22.12.2025 (திங்கட்கிழமை) முதல் 07.01.2026 (புதன்கிழமை) வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது 09.01.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 10.01.2026 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 


​மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.



தேர்வுக்கால அட்டவணை

​மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று  அரசு தேர்வுகள் ‌ இயக்கம் இயக்குனர் அறிவித்துள்ளார்.


செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.