சனவரி 07|மார்கழி 23
தருமபுரி
தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவினரிடம் உதவும் உறவுகள் பவுண்டேஷன் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், இன்று 07.01.2026 அன்று மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு தட்சிணாமூர்த்தி கால பைரவர் கோயிலுக்கு, அஷ்டமி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதால், அவர்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகளை மேம்படுத்தி வழங்க வேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டது. மேலும் காவிரி உபரிநீர் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர் நிரப்ப வேண்டும் என்றும், குறிப்பாக 380 ஏக்கர் பரப்பளவு கொண்ட அதியமான் கோட்டை சோழவராயன் ஏரிக்கும் காவிரி உபநீரை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், பொதுமக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், பக்தர்களின் வசதியும் மேம்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
– ராமன்
உதவும் உறவுகள் பவுண்டேஷன்
அதியமான் கோட்டை – தர்மபுரி
📞 87784 28691
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

