Type Here to Get Search Results !

போகி பண்டிகையில் ஆதரவின்றி ஏழ்மையில் இறந்த தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

Arun Kumar J

 சனவரி  14|மார்கழி 30




தருமபுரி


தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 74 வயது மதிக்கத்தக்க தாத்தா கடந்த மூன்று ஆண்டுகளாக பேருந்து நிலையம் சாலை ஓரங்களில் வசித்து வந்துள்ளார்.


இவர் உடல் நலக்குறைவால் இருந்தவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவரைப் பற்றி விசாரித்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை சிகிச்சை பலனின்றி இறந்த இவரது புனித உடலை கம்பைநல்லூர் காவல் நிலைய காவலர் ராஜீ சுந்தரம், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் சையத் ஜாபர், கிருஷ்ணன், மருத்துவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 189 ஆதரவு அற்றும், ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.



செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.