சனவரி 14| மார்கழி 30
தருமபுரி
மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவையை கடந்த புதினான்கு ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை மை தருமபுரி அலுவலகத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து சிறப்பாக பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். சமத்துவ பொங்கல் திருநாளை மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, ஸ்ரீ அகாடமி சேவியர், தகடூர் டிஜிட்டல் முஹம்மது ஜீசன் ஆகியோர் தலைமை தாங்கினார்,
சிறப்பு அழைப்பாளராக எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், கட்டுமான தொழிற்சங்கம் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் சையத் ஜாபர், செந்தில், தன்னார்வலர்கள் கணேஷ், குணசீலன் ஆகியோர் பொங்கல் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

