ஜனவரி 13|மார்கழி 29
தருமபுரி
மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் செய்து வருகின்றனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் வகையில் கைம்பெண்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் புடவைகள் வழங்கப்பட்டது. தருமபுரி நகரில் ஏழ்மையில் உள்ள கைம்பெண்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கட்டுமான தொழிலாளர் சங்கம் பொது செயலாளர் கிருஷ்ணன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், சையத் ஜாபர் ஆகியோர் தொகுப்பை வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

