Type Here to Get Search Results !

திருவள்ளூர்- வீட்டு மாடியில் படித்துகொண்டிருந்த மாணவி.. போதையில் வெட்டிய 3 பேர் கொண்ட கும்பல்!

Arun Kumar J

 





ஏப்ரல் 15,திருவள்ளூர் 


மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டியதில் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரை பொது மக்கள் பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி நேற்றிரவு தமது வீட்டின் மொட்டை மாடியில் படித்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென வந்து கத்தியால் வெட்டியதில் வலது கை, நெற்றி, பின்னந்தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.


 

அப்போது அந்த மாணவி கூச்சலிட்டதில் வீட்டில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று போதையில் இருந்த ஒருவரை பிடித்து அடித்து மீஞ்சூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அந்த நபரை குறித்து விசாரித்ததில் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த டில்லி பாபு என தெரியவந்தது. பலத்த காயம் ஏற்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பிடிபட்ட நபரை கைது செய்த நிலையில், பொது மக்கள் அடித்ததில் பின்னந்தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக பொன்னேரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தப்பி ஓடிய இருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.