ஏப்ரல் 14, தருமபுரி
தன்னுயிர் பணயம் வைத்து நம் உயிரைக் காக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு தேசிய தீயணைப்பு சேவை தின நல்வாழ்த்துக்கள். ஏப்ரல் 14, 2026 மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்பு சேவை தினம் அனுசரிக்கப்பட்டு, இறந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
எந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டாலும் உடனே வந்து உதவி செய்யும் தீயணைப்பு துறை வீரர்களுக்கு நம் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்வோம். இதில் தருமபுரி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், கணேஷ், அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய தீயணைப்பு சேவை தினம் போற்றினர்.

