பங்குனி 01|திங்கள் கிழமை
மார்ச் 16|தருமபுரி
தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் கடந்த ஆறாண்டுகளாக மை தருமபுரி அமைப்பின் சார்பாக பசிக்குதா வாங்க சாப்பிடுங்க அன்னதானம் வழங்கும் சேவை தினந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்னதானம் சேவை திட்டத்திற்கு பல நல்ல உள்ளங்களின் ஆதரவும், பல அமைப்புகளின் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாகும்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மார்ச் மாதம் முதலே தொடங்கி உள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக தினந்தோறும் நீர்மோர் வழங்கும் சேவை தொடங்கப்பட்டது. மருத்துவ பயனாளர்களின் பார்வையாளர்களுக்கும், பசித்தோருக்கும் மதிய அன்னதானம் உடன் நீர்மோர் வழங்குப்படும்.
சிறப்பு விருந்தினராக தருமபுரி STS ஜீவல்லரி நிர்வாக இயக்குனர் அய்யா சுரேஷ் பாபு, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் செயலாளர் செந்தில்குமார், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, தன்னார்வலர்கள் கணேஷ், காதர் ஆகியோர் நீர்மோர் வழங்கும் சேவை திட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

