பங்குனி 03|செவ்வாய் கிழமை
மார்ச் 17|திருவண்ணாமலை
தமிழகத்தில் வாக்குப்பதிவு தேதியை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பறக்கும் படையினர் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சோதனை மேற்க்கொண்டு வருகின்றனர், அதன் தொடர்ச்சியாக
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இஆப, அவர்கள் (16.03.2026) அன்று திருவண்ணாமலை ஏந்தல் சாலையில் தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

