Type Here to Get Search Results !

முறையாக பராமரிப்பு இன்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் - கேள்விக்குறியாக மாறும் பயணிகளின் பாதுகாப்பு? இலவசம் எதற்கு?

Arun Kumar J

 பிப்ரவரி 16|மாசி 04








வெப்படை, ஈரோடு 


ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் முதல் திருச்செங்கோடு வரை இந்த வழித்தடத்தில் மக்கள் பயணிக்க 08 எண் கொண்ட அரசுப் பேருந்து போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன.


இந்த வழித்தடத்தில் இயங்கும் TN30 N1332  என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து நேற்று இரவு 9.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் வெப்படையில் இருந்து திருச்செங்கோடு நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.


சரியாக இரவு 09.45 மணிக்கு ஆனங்கூர் இரயில்வே கேட் பகுதியை வந்தடைந்தது. அப்போது தொடர்வண்டி செல்ல இருந்ததால் இரயில்வே கேட் மூடப்பட்டதால் இந்த அரசு பேருந்தும் இஞ்சின் (OFF) அணைக்கப்பட்டது. தொடர்வண்டி கடந்த பிறகு இரயில்வே கேட் திறக்கப்பட்டது. 


இப்பேருந்தில் (SELF START) செல்ப் ஸ்டார்ட் இல்லாததால் கூட்ட நெரிசலில் விபத்தை ஏற்ப்படுத்தும் வகையில் தொடர்ந்து அப்பேருந்து பின்னோக்கிச் சென்றது இப்பேருந்தின் பின்னால் இருந்தவர்களும், பேருந்தில் பயணித்தவர்களும்  கூச்சலிட்டவாறு  பதறிப்போனார்கள், 


இதுபோன்ற முறையற்ற பராமரிப்பு இன்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிப்பு மற்றும் பழுது பார்த்து இயக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.