தருமபுரி பிப்ரவரி-12
தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியனூரைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர், தனது மகள் சித்ரா காணவில்லை என்று தொப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் CSR:118/2026 பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது சித்ராவை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது சித்ரா தன் கணவருடனோ, பெற்றோருடனோ செல்ல விருப்பமில்லை என்றும், தனியாக வாழ விருப்பம் உள்ளதாக தெரிவித்ததால், அவரை சட்டரீதியாக வற்புறுத்த இயலாத காரணத்தால் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் ஆதங்கம் அடைந்த சித்ராவின் உறவினர்கள் மாதையன், சுரேஷ்குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். அதன் பேரில் தொப்பூர் காவல் நிலைய குற்ற எண்: 35/2026-படி மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள எதிரிகளை தேடி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வரும் நிலையில் உண்மைக்கு புறம்பான தவறான செய்தியை ஒளிபரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- காவல் கண்காணிப்பாளர் / தருமபுரி மாவட்டம்.

.jpeg)