Type Here to Get Search Results !

இறந்த கணவரின் உடல் அருகே அமர்ந்து கதறி அழுத மனைவி; இறுதிச்சடங்கு முடிந்த 20-ம் நாளில் நடந்த பகீர் திருப்பம்..!

Arun Kumar J

 மாசி 30|சனிக்கிழமை 



கர்நாடகம் |மார்ச் 14


கர்நாடக மாநிலம் தும்கூரு பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவருக்கும், பரமேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்திலையில் கடந்த ஜனவரி 30-ம் தேதி, பரமேஷ் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது கணவர் திடீர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி அழுதுள்ளார் ஆஷா.



தனது உறவினர்களிடம் பிரேத பரிசோதனை செய்தால் கணவரின் உடல் சிதைந்துவிடும் என்று கூறி, போலீசாரிடம் செல்ல வேண்டாமெனக் கெஞ்சி அழுதார். அவரது கண்ணீரை நம்பிய உறவினர்கள், எவ்வித சந்தேகமுமின்றி பரமேஷின் உடலை அடக்கம் செய்தனர் இந்நிலையில் கணவர் இறந்து வெறும் 20 நாட்களிலேயே ஆஷா சந்திரப்பா என்பவரை அவசர அவசரமாகத் திருமணம் செய்துகொண்டார். 



இந்தச் செயல் பரமேஷின் சகோதரிகளுக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆஷாவின் நடவடிக்கையை  கண்டு சந்தேகமடைந்த அவர்கள் இது குறித்து ஹெப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், புதைக்கப்பட்ட பரமேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.


பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பரமேஷ் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. 


போலீசார் ஆஷா மற்றும் அவரது இரண்டாவது கணவர் சந்திரப்பாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆஷாவுக்கும் சந்திரப்பாவுக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இது பரமேஷுக்குத் தெரிய வந்ததால், அவர் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்த ஜோடி, கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டது.



இரவு தூங்கிக் கொண்டிருந்த பரமேஷின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, மூச்சுத் திணறச் செய்து இந்த கள்ளக்காதல் ஜோடி கொடூரமாகக் கொன்றது. அதன் பின்னர், அது இயற்கையான மரணம் எனப் பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைத்த விபரம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது போலீசார் ஆஷா மற்றும் சந்திரப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.