Type Here to Get Search Results !

ஆதரவு அற்று இறந்த ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

Arun Kumar J

 பிப்ரவரி 28|மாசி 16





தருமபுரி,


தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல் நிலையம் உட்பட்ட எல்லையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்துள்ளார்.  இவரது புனித உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து மை தருமபுரி அமரர் சேவை மூலம் பச்சியம்மன் கோவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். தருமபுரி  கோட்டப்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.அருள்ராஜ், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் சையத் ஜாபர், தன்னார்வலர் கோகுல்ராஜ், கார்த்திகேயன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 192 ஆதரவு அற்றும், ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.