மாசி 30|சனிக்கிழமை
மார்ச் 14|மதுரை
மதுரையில் தமிழ்நாடு மின் வாரியப் பொறியாளர்கள் சங்கம் (TNEB Engineers Association) நடத்திய இந்தப் போராட்டம், மின் வாரியத்தின் உயர்மட்டப் பொறியாளர்கள் (Class I & II Officers) சந்திக்கும் முக்கியமான ஊதியப் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றமும் (Wage Revision), காலமுறை ஊதிய உயர்வும் வழங்கப்படுவது வழக்கமாக நடைமுறையில் உள்ளது.
சமீபத்திய அரசாணை அல்லது வாரிய முடிவுகளின்படி, 'Class I' மற்றும் 'Class II' அதிகாரிகளுக்கு (உதவிச் செயற்பொறியாளர் முதல் தலைமைப் பொறியாளர் வரை) இந்த 4 ஆண்டுக்கால ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படவில்லை என்று பொறியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் இளநிலை ஊழியர்களை விடச் சில நேரங்களில் சீனியர் பொறியாளர்கள் குறைவான ஊதியம் பெறும் நிலை (Pay Anomaly) ஏற்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனால் நேற்று மார்ச் 13-ம் தேதி இரவு, மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் உதவிப் பொறியாளர்கள் (AE), உதவிச் செயற்பொறியாளர்கள் (AEE), செயற்பொறியாளர்கள் (EE) மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் இதில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் "தகுதியுள்ள அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்கு", "பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்து" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இரவு முழுவதும் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுப் பொறியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் மின் வாரியத்தில் இது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என ஒப்பந்தம் உள்ளது. இப்போது இந்த 4 ஆண்டு விதியை அரசு அதிகாரிகள் போல மாற்றுவது அல்லது தள்ளிப்போடுவது மின்வாரிய பொறியாளர்களை பெருமளவில் பாதிக்கும் என்றும்,
ஊதிய உயர்வு மட்டுமின்றி, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதம் மற்றும் பதவி உயர்வுப் பட்டியல்களில் நிலவும் குளறுபடிகள் களப்பணியில் உள்ள பொறியாளர்களுக்கு மன உளைச்சலைத் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தனர் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தால் நிர்வாகப் பணிகள் சில இடங்களில் பாதிப்படைந்தாலும், மின் விநியோகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதாகச் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று மகன் வாரியத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

