Type Here to Get Search Results !

ஆசிரியர் தேர்வு வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான Hall Ticket வெளியிட்டுள்ளது

Arun Kumar J

 தமிழகம் அக்டோபர் 01|புரட்டாசி 15


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்க எண் 02/2025 நாள் 10.7.2025-ன் படி 2025 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு எதிர்வரும் 12.10.2025 அன்று நடத்தப்பட உள்ளது இத்தேர்வினை எழுத 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 தேர்வாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.



விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு (Hall ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https:www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனவே தேர்வுகள் 30.09.2025 முதல் அவர்களது user ID மற்றும் passward ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வு கூட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது எனவே தேர்வுகள் தேர்விற்கு ஒரு வார காலம் முன்னதாகவே தங்களுடைய நுழைச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தப்படுகிறது.


-வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம்

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.