அக்டோபர் 30|ஐப்பசி 13
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் ( INNER WHEEL CLUB OF RANIPET) சார்பில், "ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான்" (RANIPET SAREE WALKATHON) என்ற பெயரில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடையை புதன்கிழமை நடத்தப்பட்டது.
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய "ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான் " விழிப்புணர்வு நடையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், வாலாஜா மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள்,தனியார் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் நமது பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கலந்துகொண்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடைபயணமாக சென்று ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவு செய்தனர்.இந்த விழிப்புணர்வு நடையில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் தலைவர் பிரியா வினு, செயலாளர் அமலா அரவிந்த்,பொருளாளர் அஸ்வினி கணேஷ், ஜி.கே.குழுமம் ஷீலா வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் மற்றும் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பள்ளிக், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் ( INNER WHEEL CLUB OF RANIPET) சார்பில், "ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான்" (RANIPET SAREE WALKATHON) என்ற பெயரில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடையை புதன்கிழமை நடத்தப்பட்டது.
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய "ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான்" விழிப்புணர்வு நடையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், வாலாஜா மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் தனியார் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் நமது பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கலந்துகொண்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடைபயணமாக சென்று ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவு செய்தனர்.இந்த விழிப்புணர்வு நடையில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் தலைவர் பிரியா வினு, செயலாளர் அமலா அரவிந்த்,பொருளாளர் அஸ்வினி கணேஷ், ஜி.கே.குழுமம் ஷீலா வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் மற்றும் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பள்ளிக், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

