அக்டோபர் 30|ஐப்பசி 13
பொம்மிடி
நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களுக்கு திருக்குறள் விழிப்புணர்வு கருத்தரங்கம்அரசின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செந்தில் முதுகலை தமிழ் ஆசிரியர் வரவேற்புரை நல்கினார், தலைமை ஆசிரியர் சி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார், பரமசிவம் குறள் பேரவை முன்னிலை வகித்தார், புலவர் மலர்வண்ணன் ஒருங்கிணைப்பாளர் நோக்கு உரை ஆற்றினார், பதிப்பாசிரியர் திருவேங்கடம் திருக்குறளும் வாழ்விலும் என்ற தலைப்பில் உரையாற்றினார், எழுத்தாளர் ரவீந்திர பாரதி திருக்குறளை விளக்கிப் பேசினார்,
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, மூன்றிலும் மதியரசி என்ற மாணவி முதல் பரிசை தட்டிச் சென்றார் பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இறுதியாக சம்பத் தமிழாசிரியர் நன்றியுரை வழங்கினார் கூட்டத்தில் சிவகுமார் அறிவியல் ஆசிரியர், கார்த்திக் ஆங்கில ஆசிரியர், மோகன் குமார் தமிழ் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்றார்கள்.


