Type Here to Get Search Results !

நலம் காக்கும் ஸ்டாலின்' உயர் சிறப்பு மருத்துவ முகாம் பி.பள்ளிப்பட்டி செயின் மேரிஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது கீழ்கண்ட 11 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பயன் பெறலாம்.

Arun Kumar J

 நவம்பர் 22|கார்த்திகை 06




பாப்பிரெட்டிபட்டி 


மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி, மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்எ.வ.வேலு அவர்கள் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்கள் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல்படி. மக்கள் உடல் நலனை காத்திடும் வகையில் பல்வேறு உயர்தர மருத்துவ பரிசோதனைகளையும் மருத்துவ சிகிச்சைகளையும் மக்கள் வாழ்விடங்களுக்கே சென்று வழங்கிட நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  M..K. Stalin அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நலம்காக்கும்_ஸ்டாலின் மருத்துவ முகாமினை, பாப்பிரெட்டிப்பட்டி  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு இன்று 22.11.2025 சனிக்கிழமைகளில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை B.பள்ளிப்பட்டி செயின் மேரிஸ் பள்ளியில் நடைபெறுகிறது.



இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனை மற்றும் உடனடி சிகிச்சை சேவைகள்  வழங்கப்படும் “நலம்  காக்கும் ஸ்டாலின்  ” திட்டம் 

✔ பொது பரிசோதனை

✔ இரத்தச் சோதனை

✔ கண் பரிசோதனை

✔ பெண்கள் நல பரிசோதனை

✔ மூத்த குடிமக்கள் கவனிப்பு

✔ உடனடி மருந்தளிப்பு 



பயன்பெறும் 11 ஊராட்சிகள்:


1.பொம்மிடி 

2. B பள்ளிப்பட்டி 

3.பையர்நத்தம் 

4.போதக்காடு

5.வெங்கடசமுத்திரம் 

6.மோளையானூர் 

7.ஆலாபுரம் 

8.பூதநத்தம் 

9.மெணசி

10.துரிஞ்சிப்பட்டி

11.பாப்பிரெட்டிபட்டி 


பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.