சனவரி 24 | தை 10
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் (TNHRCE) கீழ் இயங்கும் சென்னை, திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய விவரங்கள் (Quick Summary):
நிறுவனம்: இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
மொத்த காலியிடங்கள்: 10
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
கல்வித்தகுதி: 8-வது தேர்ச்சி முதல் 10-வது தேர்ச்சி வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2026
பதவிகளும் சம்பள விவரங்களும்:
இந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர் மற்றும் வசூல் எழுத்தர் பதவிகளுக்கு மாதம் ரூ. 18,500 முதல் ரூ. 58,600 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு மாதம் ரூ. 15,900 முதல் ரூ. 50,400 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உதவி சுயம்பாகம் பணிக்கு மாதம் ரூ. 31,500 வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளது.
கல்வித் தகுதிகள்
இளநிலை உதவியாளர் மற்றும் வசூல் எழுத்தர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
அலுவலக உதவியாளர்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.
காவலர்: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வேதபாராயணம்: வேத பாடசாலையில் 3 ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உதவி சுயம்பாகம்: நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தகுதிகள் மற்றும் தேர்வு முறை:
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் மற்றும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மதம்: இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை: எவ்வித எழுத்துத் தேர்வும் கிடையாது. நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எவ்வித கட்டணமும் இல்லை (Free).
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆஃப்லைன் (Offline) முறையில் மட்டுமே அனுப்ப முடியும்.
படிவத்தை பதிவிறக்கம் செய்க: TNHRCE Official Website இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம்.
பூர்த்தி செய்தல்: விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கல்விச் சான்றிதழ் நகல்களை இணைக்கவும்.
முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 19” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.
கடைசி நாள்: 30.01.2026 (மாலை 5.45 மணிக்குள்)
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

