சனவரி 24 | தை 10
கன்யாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில், போலி முகநூல் கணக்குகளை பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் வேண்டுமானால், அதற்கு தனித்தனியாக ரேட் எனக் குறிப்பிட்டு ஆபாச உரையாடலுக்கும், உல்லாசத்திற்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. ️அந்த எண்ணில் பேசும் பெண் ஒருவர் நீங்கள் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
இதனால் கோபமுற்ற அவர்கள் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்திருந்தனர். இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
உடனடியாக களத்தில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போலி பேஸ்புக் ID மூலம் உல்லாசமாக இருக்கலாம் பணம் பறித்து ஏமாற்றிய ராமநாதபுரம் பரமக்குடி பகுதியை சேர்ந்த முகமது ஷாஜகான் என்பவரது மகள் நபிலா பேகம் (27) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

