Type Here to Get Search Results !

திருப்பத்தூர் அருகே அண்ணன் தம்பிகள் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் தயார் செய்து சொத்து அபகரிப்பு. சொத்து ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்.

Arun Kumar J

சனவரி 07 |மார்கழி 23








திருப்பதூர் 



திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மாணவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு (54).இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாட்றம்பள்ளியில் உள்ள தனது சொத்தை ஏமாற்றப்பட்டதாகவும், மேலும் 15 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகவும், அதற்கு DRO மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்துள்ளார். அந்த மனுவில் தனது தந்தைக்கு 7 பிள்ளைகள் உள்ள நிலையில் ஐந்து பிள்ளைகள் இறந்து விட்டதாக எனது தம்பிகள் கௌதம் மற்றும் கதிர்வேலு ஆகிய இருவரும் போலி இறப்பு சான்றிதழ் வாங்கி சொத்தை வீட்டு மனைகளாக விற்று விட்டனர். 



இதனை தடுக்க கோரி மாவட்ட டிஆர்ஓ மற்றும் சார் பதிவாளர் ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் அவர்களிடம் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு நிலத்தை விற்பனை செய்ய அனுமதி அனுமதித்துள்ளனர். எனவே நான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன். இதற்கு காரணம் DRO மற்றும் பத்திர பதிவுத்துறை அதிகாரி ஆவார். நாங்கள் இறந்த பின்பு எங்களது உடல் உறுப்புகளை ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்து விடுங்கள் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.