Type Here to Get Search Results !

புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு சோதனை அறிக்கை சான்று Anexure-2 கட்டாயமாக்கப்பட வேண்டும் -தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் வேண்டுகோள்

Arun Kumar J

 மாசி 22|வெள்ளிக்கிழமை 




மார்ச் 06, சென்னை


நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரம் மற்றும் மின்சார தொழில்நுட்பம் என்பது இன்றியமையாதது அத்தகைய மின்சாரப் பணியிலும், பயன்பாட்டிலும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதை தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டாலும் அதனை பயனாளிகளிடமும் பணியாளர்களிடமும் கொண்டு சேர்ப்பது நமது மின்சார தொழிற்சங்கத்தின் கடமையாக எண்ணி,



04.03.2026 தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியத்தின் வளாகத்திற்கு வெளியே  சங்கத்தின் சார்பாக மின் பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு குறித்து அதாவது  இந்திய அரசமைப்புச் சாசன சட்டத்தின் கீழ் 1956 இந்திய மின் வழங்கல் 45/1 விதி சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள மின்சார விதியின் படியும் , தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பின் படியும் வயரிங் பணிகள் முடிவடைந்ததும் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய  அங்கீகரிக்கப்பட்ட மின்சார வயரிங் பணி ஒப்பந்தக்காரர்களிடம் சோதனை அறிக்கையை (Annexure - 2) பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்த பின்பு மின்சார வாரியம் மின் இணைப்பு மீட்டர் வழங்க வேண்டும் எனவும்,வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மின்சார உயிரிழப்பை தடுப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள மின் பாதுகாப்பு உபகரணம் ஆர். சி. டி பொருத்தப்பட வேண்டும் என்கிற அறிவிப்பு விழிப்புணர்வு பதாகை நிறுவப்பட்டது.




நிகழ்ச்சியின் தொடக்கமாக மாநில பொருளாளர் திரு.ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். மாநில செயலாளர் திரு.பாக்கியராஜ் முன்னிலையில் மாநில துணைத்தலைவர் திரு.முருகானந்தம் அவர்கள் தொழிற்சங்கத்தின் உறுதிமொழி வாசிக்க மாநில தலைவர் திரு.சி.மாயாண்டி அவர்கள் அறிவிப்பு விழிப்புணர்வு பதாகையை திறந்து வைத்தார்.



மாநில  செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, சுரேஷ், செல்வம், ஞானசேகர் மற்றும்   திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள்  பொருளாளர் குணசேகரன், துணை தலைவர்  சுல்தான், துணை செயலாளர் ரவி, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய கிளை பகுதி 1 & 2 நிர்வாகிகள், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய கிளை நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



மாநில தலைவர் மாயாண்டி பேசுகையில் தமிழ்நாட்டில் ஒப்பந்தக்கார் உரிமம் பெற்றவர்கள் சுமார் 25,000 பேர் உள்ளனர்.இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் ,மின் உரிமம் எடுப்பதற்கான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கும்,மின்சார அடிப்படை உரிமை சட்டத்தை பாதுகாப்பதற்கும் மின்சார வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வீடுகளில் புதிய மின் இணைப்பு வழங்க சோதனை அறிக்கையை கட்டாயம் சமர்ப்பிக்க நுகர்வோரை வலியுறுத்த வேண்டும்.



மின்சார பாதுகாப்பு முறைகள் உறுதிப்படுத்தவே தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் ஒப்பந்தக்காரர் மின் உரிமம் சான்று வழங்குகிறது. ஆதலால் மின்சார பாதுகாப்பும் உயிரிழப்பை தடுப்பதற்கும் மின்சார பணியாளர்களையும் நுகர்வோரையும்  வலியுறுத்த மின்சார வாரியத்திற்கு கடமை உள்ளது என தெரிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக மாநில செயலாளர் திரு பாக்யராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.