தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்கங்கரை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் பாலிராம் ராத்தோட் வயது 34, இவர் கேரளாவில் கூலி வேலை செய்வதற்காக ரயிலில் பயணம் செய்த போது ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவரது உறவினர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்துள்ளதால் இறந்தவரின் புனித உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து தங்கள் உறவாக எண்ணி மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் ரோட்டரி எரிவாயு தகன மையத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மொரப்பூர் காவல் நிலைய காவலர் தேவராஜ், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் கிருஷ்ணன், கார்த்திகேயன், மருத்துவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்திய நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 193 ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தோர்களை புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

