பிப்ரவரி 23|மாசி 11
ஹரியானா,
ஹரியானா மாநிலம் குருகிராமில், தன்னுடன் லிவ் இன் உறவு முறையில் வசித்து வந்த 19 வயது இளம்பெண்ணின் உடலில் சானிடைசர் ஊற்றி தீ வைத்தும், கத்தியால் குத்தியும் கடும் சித்ரவதை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திரிபுரா மாநிலம் குருகிராமை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் சிவம் என்ற இளைஞரும் கடந்த 2025 செப்டம்பர் மாதம் 'டேட்டிங் ஆப்' மூலம் அறிமுகம் ஆகியுள்ளனர். இந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமாக மாறவே, இருவரும் கடந்த சில நாட்களாக ஒரே வீட்டில் (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி, இருவருக்கும் இடையே திருமணம் செய்வது தொடர்பாக பேசியுள்ளனர். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சிவம், அந்தப் பெண்ணின் அந்தரங்க பாகங்களில் சானிடைசரை ஊற்றி கொடூரமான முறையில் தீ வைத்துள்ளார். மேலும், மெட்டல் பாட்டிலால் பெண்ணின் தலையில் தாக்கியும், கத்தியால் குத்தியும் சித்ரவதை செய்துள்ளார். சுமார் மூன்று நாட்களாக இந்த சித்திரவதையை அந்த பெண் அனுபவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திருமண ஆசை காட்டி அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் டெல்லியில் உள்ள ஒரே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அப்பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் முன்பின் தெரியாதவர்களிடம் சாட் செய்யக்கூடாது. மீறி பழகினால் இப்படித் தான் துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.

