தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து தொழிற்சங்கங்கள் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், 2,250 காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 400 உதவி பொறியாளர்கள் மற்றும் 1,850 கள உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப ஒப்பதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி மின்சாரத்துறையில் வேலை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு, தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.